இடம் (Plot) வாங்கும் போது, சரி பார்க்க வேண்டிய விடயங்கள் என்னென்ன?
நான் என்னுடைய மூன்று வருட அனுபவத்தில் கிடைத்த ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பட்டா: இது விற்பவரின் பெயரில் இருக்க வேண்டும்.
வில்லங்கம் : கடந்த 50 வருடத்தில் அந்த இடத்தின் உரிமையாளர்களின் விவரத்தை வில்லங்கம் மூலமாக சரி பார்க்க பட வேண்டும்..
தாய் பத்திரம் இருக்க வேண்டும், அதோடு அந்த பகுதியின் வரைபடம் இருத்தல் நன்று..
CMDA அப்ரூவல் இருந்தால் மிக நன்றாக இருக்கும், இல்லையெனில் அந்த செலவு நம்மை வந்து செரும், அதுவும் அப்ரூவல் வாங்குவது சாதாரண செயலாக இல்லை. சிரமமாக இருக்கும்..
ரோட்டின் அகலம்: அந்த இடம் 20 அடி அகல ரோடு அருகே இருக்க வேண்டும்.. அப்போ தான் அப்ரூவல் கிடைக்கும். அதொடு சிறய தெருவில் பெரிய வாகனங்கள் செல்லவும் கஷ்டமா இருக்கும்.
மின் இணைப்பு: அந்த தெரு அல்லது ரோட்டில் மின் இணைப்பு கம்பம் இருக்க வேண்டும், இல்லையெனில் அதற்கான செலவு நாம செய்யும்படி ஆகிவிடும்.. அதே போல உயர் மின் அழுத்த கம்மம் அருகே இல்லாதவாறு பாத்து கொள்ள வேண்டும்..
குடி நீர்: இடத்திற்கு அருகில் இருக்கும் குடிநீரின் தரத்தை செக் பண்ணிகணும். உப்பு தண்ணய இருந்தா வாழ்க்கை முழுவதும் கஷ்டமா போய்டும்.
NOC: அந்த இடம் இரயில்வே துறைக்கோ அல்லது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதான்னு செக் பண்ணனும் , அப்படி இருந்தா உரிய துறையுடம் இருந்து NOC வாங்க வேண்டும்..
நீர் பிடிப்பு பகுதி: அந்த இடம் ஏரி அல்லது குளம் அருகே உள்ளதானு பாத்துகணும், நீர் பிடிப்பு பகுதி எனில் எந்தவித அப்ரூவலும் கிடைக்காது. அங்கு மழை காலங்களில் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
இடுகாடு, கோவில், பள்ளிகூடம் மற்றும் சர்ச் போன்ற இடத்திற்கு மிக அருகில் இல்லாதவாறு பாத்து கொள்ளணும், இல்லையெனில ஒரு சில நாட்கள் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் மற்றும் சில நேரங்களில் இரைச்சல் கூட அதிகமாக இருக்கும்.
அதேபோல போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டில் உங்கள் இடம் இருந்தால் வெளியே வாகனங்கள் நிறுத்த கஷ்டமாக இருக்கும்.
எனக்கு வேறு ஏதாவது தகவல் கிடைத்தால், மீண்டும் புதுப்பிக்குறேன்
குறிப்பு
நிலம் அல்லது வீடு வாங்கும்போது எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத இடத்தை தேர்வு செய்து வாங்க வேண்டும்
நாங்கள் உங்களுக்கு எந்தவித சட்ட சிக்கல்களும் வில்லங்கமும் இல்லாத நாளடைவில் உங்கள் முதலீட்டிற்கு நல்ல ஒரு லாபத்தை தரக்கூடிய இடத்தை தேர்வு செய்து தருகிறோம்